ஈழத்தின் மூத்த கவிஞரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை விரிவரையாளருமாகிய கல்வயல் வே.குமாரசாமி நேற்று இரவு காலமானார்.இவர் தமிழின் மரபுக் கவிதையிலும் புதிய கவலிதையிலும் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
.
கல்வயல் வேதவனப் பிள்ளையார் கோவில் சூழலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் (சனவரி 1, 1944 – திசம்பர் 10, 2016) அவர். சங்கத்தானையில் வசித்து வந்தார். தபால் திணைக்கள தபால் அதிபராகப் பணியாற்றினார். தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்ட இவர் ஆசிரியர் கலாசாலையில் சில காலங்கள் வருகை விரிவுரையாளராகத் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாப்பாப்பா, பாடு பாப்பா, பாலர் பா, முறுகல், சொற்பதம் முதலியன இவர் எழுதிய நூல்கள் ஆகும்.