குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுச் சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுச் சொத்துக்களை தனியார் மயப்படுத்தும் யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாட்டு கடன்களை செலுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் பொருளாதாரத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்பினரும் வரவு செலவுத் திட்ட யோசனைகளை வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையே நாடு எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவால் எனக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் வருமானங்கள் பாரியளவில் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை சேமிப்பு பங்கு நிதியாக மாற்றிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.