குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலியின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வந்த Paolo Gentiloni பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி Sergio Mattarella பிரதமராக Paolo Gentiloni நியமிக்கப்பட்டுள்ளார்.
62 வயதான Paolo Gentiloni ஐ அரசாங்கமொன்றை அமைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி கோரியுள்ளார். நாட்டை நல்ல வழியில் வழிநடத்தப் போவதாக குறிப்பிட்டுள்ள Paolo Gentiloni ஓர் ஊடகவியலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நியூசிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்கிலீஷ் பதவி ஏற்றுள்ளார். நியூசிலாந்து பிரதமராக கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்த ஜோன் கேயின் பதவி விலகலைத் தொடர்ந்து பில் இங்கிலீஷ் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.