160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் உயரமான நத்தார் மரம் அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நத்தார் மரம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகங்களினால் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.
பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டு மரம் அமைக்கும் பணிகள் பகுதியளவில் மேற்கொள்ளப் பட்ட நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கத்தோலிக்க ஆலயங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் மரத்தை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதுடன் இந்த மரம் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படவில்லை எனனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love