தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்திற்காக இந்தளவு தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்காசியாவின் மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கையின் பொருளாதாரம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்கள் எனவும், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் டொலர்கள்
176
Spread the love