குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கட்சிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டின என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இனவாதம் பற்றி பேசும் எவரும் பௌத்தர்களாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
130 மில்லியன் ரூபா செலவில் பேருவளையில் நிர்மாணிக்கப்பட்ட ஐ.எல்.எம். சம்சூதீன் வித்தியாலய புதிய கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் சமூக முறைமையில் மாற்றம் கொண்டுவரவே அரசாங்கம் அமைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் ஊடாக பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் சமாதானத்தை நிலைநாட்ட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சமாதானத்தை உருவாக்கக்கூடிய தலைவர் ஒருவர் நாட்டில் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டின – ராஜித சேனாரட்ன
157
Spread the love