173
திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றையதினம் இரவு கைதி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கே. பரமேஸ்வரன் என்னும் 30 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
எனினும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தனது கணவன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் தொிவிப்பதனை ஏற்க முடியாதென உயிரிழந்த கைதியின் மனைவி தெரிவித்துள்ளார்.
Spread the love