164
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆறு இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரிடம் இருந்து வாள்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love