எதிர்வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இது சம்பந்தமாக ஆய்வு நடத்தி கட்டுரை ஒன்றை எர்த் சயன்ஸ் என்னும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
1891-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரையான 122 ஆண்டுகளில் இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்து அதன்படி இந்த கட்டுரையை எழுதியுள்ளனர்.
தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகுமெனவும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது, இந்த புயல்களின் சக்தியும் அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.