174
வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 27 பெண்கள் உள்பட 172 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் 10 ஆயிரத்து 432 பேர் 97 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் 48 மணிநேரத்திற்கு மேலாகியும் மின் விநியோகம் சீராகவில்லை எனவும் செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுக் காணப்படுவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love