குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடிகள் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக மட்டுமே குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிணை முறி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெற கூட்டமைப்பு முன்வரவேண்டும்! டிலான் பெரேரா
நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த சந்தர்ப்பத்தில் உச்சபட்ச பயனை அடையவேண்டுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது ஒற்றையாட்சிக்குள் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு முன்வரவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
தற்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் மஞ்சள் நிற சமிக்ஞை ஒளித்துக்கொண்டிருக்கிறது
கிடைக்காது என்று தெரிகின்ற ஒரு விடயத்திற்காக காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு ஒரு வடிவத்தில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன் எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சமஷ்டி முறைமையா? ஒற்றையாட்சி முறைமையா என்ற வாத விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கி
இது தொடர்பில் சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா மேலும் குறிப்பிடுகையில்:-
மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பஸ் ஒன்று வந்துகொண்டிருக்கின்றது. அதுவே இருக்கின்ற இறுதி பஸ்ஸாகும். இந்த பஸ்ஸை கைவிட்டோமானால் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய்விடும். எனவே எந்த முயற்சியாவது மேற்கொண்டு இந்த இறுதி பஸ்ஸில் ஏறிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தற்போது இனப்பிரச்சினை தீர்வானது சமஷ்டி முறைமையிலா அல்லது ஒற்றையாட்சி முறைமையிலா அமையவேண்டும் என்பது தொடர்பில் பாரிய ஒரு விவாதமே நடந்துகொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் சில விடயங்களையும் அதுதொடர்பான யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். அதாவது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தில் மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதாவது எக்காரணம் கொண்டும் சமஷ்டி முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கடுமையான தீவிரமான நிலைப்பாட்டில் பெரும்பான்மை மக்கள் காணப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் நான் சமஷ்டி முறைமையிலான தீர்வை பாரிய விருப்பத்துடன் ஆதரிக்கின்றேன். ஆனால் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் நான் அதனை கூற மாட்டேன்.
காரணம் பெரும்பான்மையான மக்கள் என்ன கூறுகின்றார்களோ அதனையே நான் கூற முடியும். எனவே இந்த இடத்தில் எமக்கு ஒரு தெரிவு இருக்கின்றது. அதாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது இந்த விடயத்தில் ஒரு பாரிய வகிபாகத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பி
அந்த செய்தியானது பெரும்பான்மை மக்களிடம் செல்ல வேண்டும். அவ்வாறு கூட்டமைப்பு சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தில் மட்டும் தங்கியிருக்காது சமஷ்டி முறைமைகளின் பண்புகளைக் கொண்ட தீர்வுத்திட்டத்தை ஒற்றையாட்சியின் ஊடாக பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும். சமஷ்டி என்ற வசனத்தை முன்வைத்து தீர்வுத் திட்டத்தை இழந்துவிடும் அபாயத்தை நெருங்குவதைவிட ஒற்றையாட்சி என்ற வசனத்தை முன்வைத்து காணி, பொலிஸ் அதிகாரங்களையும் பெற்று ஒத்திசைவுப்பட்டியலை நீக்கிக்கொள்வது பயனுள்ளது என்பதே எனது நிலைப்பாடாகும். எங்களது கட்சியின் சார்பிலும் அதனையே வலியுறுத்துகிறோம்.
சமஷ்டி என்பது பாரிய சிக்கலுக்குரிய வார்த்தைப் பிரயோகமாக மாறியுள்ளது. இதனை மாற்றுவது என்பது தற்போதை அரசியல் களநிலைமையில் மிகவும் கடினமானதாகும். சமஷ்டி என்பது நாட்டை பிரிக்காது என்ற விடயத்தை என்னைப்போன்ற மிதவாதப் போக்குடையோர் எவ்வளவுதான் வலியுறுத்தினாலும், பெரும்பான்மை மக்கள் மத்தியில் அந்தக் கருத்தை இசைவாக்கம் செய்வது மிகவும் கடினமாகும்.
எனவே தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒற்றையாட்சி முறைமை ஊடாகவேனும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதே யதார்த்தமானதாக அமையும். இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு புரிந்துகொள்ளுமென நாங்கள் நம்புகிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் கோரிக்கை எவ்வாறானதென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் கிடைக்காது என்று தெரிகின்ற ஒரு விடயத்திற்காக காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு ஒரு வடிவத்தில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.