குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதல் தடவையாக வீடியோ தொழில்நுட்பத்தில் பெனால்டி வழங்கப்பட்டுள்ளது. கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இவ்வாறு பெனால்டி வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் நடுவர் வீடியோ காட்சிகளை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் பெனல்டி வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் Kashima Antlers கழகமே முதல் தடவையாக இந்த சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. நடுவர் Viktor Kassai க்கு அவரது உதவியாளர் அறிவித்ததனைத் தொடர்ந்து போட்டியை நிறுத்திவிட்டு விடியோ காட்சியை அவதானித்து பொனல்டி வழங்கியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஜப்பானின் Kashima Antlers கழகம் Atletico Nacional கழகத்தை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது. முதல் தடவையாக ஆசிய கழகமொன்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.