இந்தியாவில் தேசிய மற்றும் மாநில பிரதான வீதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதானவீதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகக் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் மேற்படி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பிரதானவீதிகளில் தற்போது உள்ள மதுபானக் கடைகளின் அனுமதிப்பத்தரத்தை மார்ச் 31-ம் திகதி வரை செல்லும் என தெரிவித்த நீதிமன்றம் அதன் பின்னர் புதுப்பிக்கக்கூடாது எனவும், பிரதான வீதிப் பகுதிகளில் புதிதாக அனுமதிப்பத்தரம் எதுவும் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.