குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விவகாரப் பொறுப்பாளர் எனக் கூறப்படும் எமில்காந்தனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
2006ம் ஆண்டில் ராடா என்னும் நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக எமில்காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 124 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட மா அதிபர் எமில் காந்தன், டிரான் அலஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.