குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணகுழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் 27ம் திகதி அல்லது 31ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படாமைக்கு தாமே காரணம் என சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும் உண்மையில் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமும் தேவையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மீது குற்றம் சுமத்துவது இலகுவானது என்ற போதிலும் அவரது பிரச்சினைகளை புரிந்து கொள்வது கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.