குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த அரசாங்கத்தின் சில விஷமிகள் மத்திய வங்கியில் குழப்பம் விளைவித்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் ஆதரவாளர்கள் சிலர் மத்திய வங்கியில் கடமையாற்றி வருவதாகவும், அவர்கள் குழப்பங்களை விளைவித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இவ்வாறான நபர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய வேண்டும், நிதி நெருக்கடி ஏற்பட வேண்டுமென்ற அடிப்படையில் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் 5000 ரூபா நாணயத் தாள் ரத்து செய்யப்பட உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.