174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்க் பேராளிகள் 110 பேருக்கு கொலம்பியா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. அண்மையில் பார்க் கெரில்லாக்களுக்கும் கொலம்பிய அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
அரசியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படவில்லை என கொலம்பிய நீதி அமைச்சர் Jorge Londono தெரிவித்துள்ளார். அனைத்து மன்னிப்பு வழங்குதல் பரிந்துரைகளும் நீதவான்களினால் பரிசீலனை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love