கௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள், தங்களது அரசியல் சுயநலத்திற்காக கௌரவக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இதனால், கடந்த 3 ஆண்டுகளில, கலப்பு திருமணம் செய்த 81 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் எனவே தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளை தடுக்க புதிதாக சட்டம் இயற்றவும், எஸ்.சி. பிரிவு மக்களுக்கு தற்காப்புக்காக ஆயுதங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி என்பவரர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சட்டமாஅதிபர்;, கௌரவக் கொலையை தடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அனைத்து மாநில அரசுகளின் கருத்தை கேட்டு விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி ‘கடந்த செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த இரண்டு வாரம் காலஅவகாசம் வேண்டும் எனக் கோரியதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கௌரவக் கொலை குறித்து மத்திய அரசு தனிச் சட்டத்தை விரைவாக இயற்றும் என்பதை நம்பி இந்த வழக்கை முடித்து வைக்கிறோம என உத்தரவிட்டனர்.