155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலை வழக்கின் சந்தேக நபர்களாக ஐந்து காவல்துறையினரையும் எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது.
யாழ் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. அதன் போது சந்தேக நபர்களான ஐந்து காவல்துறையினரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.அதனை தொடர்ந்து ஐவரையும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டது.
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாண காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல் துறையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஐவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவர்களின் விளக்கமறியல் திகதி நீடிக்கப்பட்டது.
Spread the love