155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாட்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.
போலியான கையொப்பங்களை பயன்படுத்தி ஆவண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அண்மையில் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
வெளிநாட்டு பயணமொன்றை மே;றகொள்ள அனுமதியளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Spread the love