164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கால மாறு நீதிப்பொறிமுறைமையும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love