குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலில் செலவிடப்படக்கூடிய உச்சபட்ச தொகை வரையறுக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் செலவிடக்கூடிய உச்சபட்ச தொகையை நிர்ணயம் செய்யும் உத்தேச சட்ட வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் தெரிவித்துள்ளது.
தேர்தலில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளை தவிர்க்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூலம் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சரின் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு தேர்தலின் அடிப்படையிலும் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.