167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ஏ.கே. என்ற வங்கியின் மீது இவ்வாறு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் காரணமாக நான்கு மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிப்ட் க்ளோபல் மணி ட்ரான்ஸ்வர் முறையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துருக்கியின் மூன்றாவது பெரிய வங்கியாக ஏ.கே. வங்கி கருதப்படுகின்றது. கடந்த 8ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love