குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அதிகரிக்கப்பட்ட தொகையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கூட்டத்தொடர் ஒன்றுக்கு வருகை தருவதற்காக அதிகரிப்பட்டுள்ள இரண்டாயிரத் ஐநூறு ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என சபாநயகர் கரு ஜயசூரியவுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வருகைக்கான கொடுப்பனவு 500 ரூபாவிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கம் பாரியளவு கடன் நிலையில் இருக்கின்ற போது , அதிலிருந்து மீள நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலையில், மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அதற்கு ஈடாக தன்னால் அர்ப்பணிப்பு செய்யப்பட வேண்டும் எனவும், இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனை தான் நிராகரிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணத்தை தனக்கு வழங்காதிருக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.