தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து ராமேசுவரத்தில் வைகோ தலைமையில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வைகோ கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கியது முதல் தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியை சந்தித்து மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவித்து உள்ளதாகவும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகின்ற எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு, இலங்கையுடன் பேசி தடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் உள்ள தமிழக விசைப்படகுகளை மீட்பதுடன் கடலில் மூழ்கி சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்ததாகவும் இல்லாவிட்டால் இதற்காக வழக்கு தொடர்ந்து தானே ஆஜராகி வாதாடுவேன் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்