177
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவின் கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் கரையோர பகுதிகளை தாக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளதனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
Spread the love