மலேசியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(17) பிற்பகல் நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதியின் இப்பயணத்தின் போது இலங்கை மலேசிய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்கு இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு 19 வருடங்களுக்குப் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மலேசிய பிரதமர் அப்துல் ரஸாக்கிற்கும்; ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்குமிடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல் இலங்கைக்கு பல்வேறு பொருளாதார நன்மைகளைப் பெற்றுத்தந்திருப்பதுடன், ஆசியாவின் ஒரு முக்கிய நாடான மலேசியா இலங்கைக்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது என ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது