புளியாவத்த பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு மைதானத்தை புனர் நிர்மானம் செய்ய மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என அமைச்சரின் வெளியிடப்பட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக குறித்த மைதானத்தை மத்திய மாகாண கைதொழில் விளையாட்டுதுறை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன¸; மத்திய மாகான சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர் எனவும் இந்த மைதானம் மத்திய மாகாண கைதொழில் விளையாட்டுதுறை அமைச்சுடன் இணைந்து கல்வி இராஜாங்க அமைச்சரினால் அபிவிருத்தி செய்யபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.