171
எவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால் அதனை எதிர்க்க பின்னிற்கப் போவதில்லை என நல்லாட்சிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்;.
எவரதும் அவசரத் தேவைகளுக்காக புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர் ஆராயாது உடனடியாக அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுமாயின் அதை எதிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார்;.
மேலும் அரசாங்கம் அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்குமாயின் நாமும் அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love