ஜோர்டன் சுற்றுலாத் தளமான கரக்கில் துப்பாக்கிப்பியோகம் மேற்கொண்டவர்கள் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தற்கொலை குண்டு ஆடைகளை கைப்பற்றியுள்ளதுடன் நகரம் மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜோர்டான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த நகர் முழுவதும் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜோர்டானில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Dec 18, 2016 @ 21:35
ஜோர்டானில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரும் காவல்துறையினரும் உட்பட 7 போ் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்டான் தலைநகர் அம்மானின் தெற்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளை அதிகமாக கொண்ட கரக் நகரம் சுற்றுலாத்துறைக்கு பிரபல்யமானது. இங்குதான் மிகப்பெரிய சிலுவைப்போர் அரண்மனை உள்ளது.
இங்குள்ள காவல்நிலையத்தை நோக்கியே இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டவர்களை காவல்துறையின் தேடி வருகின்றனர்.