165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
Spread the love