182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலைக்கவசம் அணிந்து போட்டிகளில் நடுவராக கடமையாற்றுவது சிரமமானது என அவுஸ்திரேலிய நடுவர் போல் ரைபல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, ரைபலின் தலையில் இந்திய அணி வீரர் புவனேஸ்வர்குமார் வீசிய பந்து தாக்கியது.
எனினும், தலைக்கவசம் அணிந்து கொண்டு போட்டிகளில் நடுவராக கடமையாற்றுவது மிகவும் சிரமமானது என குறிப்பிட்டுள்ள அவர் நீண்ட நேரம் வெயிலில் தலைக்கவசம் அணிந்து கொண்டிருப்பது சிரமம் எனவும் சிறிய சத்தங்களை துல்லியமாக கேட்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love