354
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மட்டக்களப்பு மங்களாராமயவின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமன தேரர் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியாகி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நலமாக இருப்பதாக பௌத்த மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக அம்பிட்டிய சுமனரதன தேரர் முகநூல் வழியாக தெரிவித்துள்ளார்.
Spread the love