167
யாழ்.கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, குறித்த சனசமூக நிலையத்தின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்களும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love