146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலி முகத் திடலில் நத்தார் மரம் அமைக்கப்படுவதற்கு கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் அமைக்கும் திட்டத்தை தாம் எதிர்க்காத போதிலும் காலி முகத் திடலில் அமைக்கப்படுவதனை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர் காலி முகத் திடலில் நத்தார் மரம் அமைப்பதனால் புற்தரைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நத்தார் மரத்தை அமைப்பதற்கு ஆரம்பம் முதலே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love