குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கையில் கடுமையான வரட்சி நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வரட்சி காரணமாக நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நாட்டில் அதிகளவு மழை பெய்யக்கூடிய சாத்தியமில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த நிலைமை நீடித்தால் கடுமையான வரட்சி நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.