கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது, முதலமைச்சரின் கீழுள்ள 13 திணைக்களுங்களுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற போது ஆதரவாக 25வாக்குகள் கிடைக்கப் பெற்றதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் திணைக்களங்கள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது
ஏனைய ஆண்டுகளில் ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை தாண்டாத நிதியொதுக்கீடுகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் 3000 மில்லியனுக்கு அதிக நிதியை இந்த ஆண்டு கிழக்கு; மாகாணத்துக்கு கொண்டு வந்திருந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்முறை 2017 ஆம் ஆண்டு 1800 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அதனை அதிகரித்துப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.