182
2014ம் ஆண்டு எழுவைதீவு கடற்பரப்பில் நள்ளிரவு வேளையில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த எழுவைதீவைச் சேர்ந்த திரு.அன்ரனி யேசுதாசன் அவர்களை நெடுந்தீவிலிருந்து காரைநகரை நோக்கி வேகமாக வந்த கடற்படையினரது டோறா படகு அன்ரனி யேசுதாசன் அவர்களின் படகினை மோதித்தள்ளியதால், அன்ரனி யேசுதாசன் அவர்களின் படகு உடைந்து முற்றாகச் சேதமாகியதோடு திரு.அன்ரனி யேசுதாசன் அவர்களும் கடும் காயத்துக்குள்ளானார். கடும் காயத்துக்குள்ளான அவர் உடைந்த படகு துண்டின் உதவியோடு கடலில் தத்தளித்த நிலையில் சில மீனவர்களால் கரை சேர்க்கப்பட்டு, ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிப்படப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. பின்பு எட்டு (8) கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்பொழுதும் வழக்கு நடந்து வருகின்றது.
இந்தநிலையில் அன்ரனி யேசுதாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவையொட்டி அவரின் புதல்வியும் கவிஞருமான செல்வி.மேரி அஜந்தா அன்ரனி யேசுதாசன் அவர்களால் “பயணம்” எனும் கவிதைத் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது. இந் நிகழ்வானது நேற்று எழுவைதீவுக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் படகு ஒன்றில் வைத்து நிகழ்த்தப்பட்டது. குறித்த நிகழ்வினை ஊர்காவற்றுறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.கா. நிருபா தலைமை தாங்கி நடாத்தினார்.
Spread the love