184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள காவல் நிலைய கட்டடம் ஒன்று அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 70 ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவல் நிலையத்தில் காவல்துறையினர் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி தொகுதி உள்ளூராட்சி சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறாக வடக்கில் அவர்கள் தாம் நினைக்கும் இடத்தில் , நினைத்தவாறு சட்டத்திற்கு புறம்பாக விகாரைகள், கட்டடங்கள் கட்டுகின்றார்கள். அது தொடர்பில் நாம் மாகாண சபையினால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
வடமாகாண சபைக்கு காணி நியதி சட்டம் உருவாக்க வேண்டும்.
மாகாண சபைகளுக்கு உரிய காணி அதிகாராம் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படாத போதிலும் எமக்கு உள்ள காணி அதிகாரத்திற்காக நாம் காணி தொடர்பான நியதி சட்டத்தினை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல் மாகாண சபை தமக்கான காணி நியதி சட்டத்ததை உருவாக்கி வைத்து உள்ளனர். காணி அதிகாரம் மாகாண சபைக்கு தற்போது இல்லாது இருந்தாலும் நாம் நியதி சட்டத்தை உருவாக்கி வைத்து இருக்க கூடாது என்று இல்லை நாம் நியதி சட்டத்தை உருவாக்கி வைத்து இருப்போம். என தெரிவித்தார்.
Spread the love