குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவி வழங்க தயார் என ரஸ்யாவும், ஈரானும் துருக்கியும் தெரிவித்துள்ளன. சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளின் முகவராக தொழிற்பட விரும்புவதாக இந்த நாடுகள் கூறியுள்ளன.
இதேவேளை, சிரிய படையினர் அலெப்போவின் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். அலப்போவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் சிரிய இராணுவப் படையினர் வெற்றியீட்டினால் அது பசர் அல் அசாட்டிற்கு பெருமிதம் அளிப்பதாக அமையும்.
மொஸ்கோ பிரகடனம் என்ற தொனிப் பொருளில் சிரியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.