மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்தக் கோரி பொதுநல மனுத் தாக்கல் செய்த தனியார் அறக்கட்டளைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன எனவும் அந்தச் சொத்துக்களை தெலங்கானா அரசு கையகப்படுத்த வேண்டும் எனவும் கோரி கரீப் இண்டர்நேஷனல் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என மனுதாரர் எப்படி கூறலாம் எனவும் அவருக்கு சகோதரர் தரப்பில் வாரிசு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இது வெறும் விளம்பரத்திற்காக தொடரப்பட்டதாகவே தெரிகிறது எனத் தெரிவித்த நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்த அறக் கட்டளைக்கு 1 லட்சம் அபராதம் விதித்துள்ளதுடன் அதனை 4 வாரத்துக்குள் தெலங்கானா அரசு வசூலிக்க வேண்டும் என உத்தர விட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.