குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கி றிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புலிகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கி தமிழ் மக்களுக்கு ஒபாமா ஏதேனும் ஒன்றை பரிசாக வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரமில்ஸ் போ ஒபாமா என்ற அமைப்பினால் இவ்வாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புஸ் அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பிற்கு உதவியதாகவும், புலிகளை தடைப் பட்டியலில் நீடிப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.