குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் ஏற்பட்டதற்கு தான் மனம் வருந்துவதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது முதலமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவிக்க முற்பட்டதையடுத்து சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை அமர்வுக்ளை அவைத்தலைவர் ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சபை மீண்டும் ஆரம்பமான போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்கு மனம் வருந்துகிறேன். நான் வரம்பு மீறி செயற்பட்டு இருப்பதாக எவராவது நினைத்தால் நான் எனது மனவருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் , சிவாஜிலிங்கத்தின் பெருந்தன்மையையும் முன் மாதிரியான செயற்பாட்டை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
அதையடுத்து கருத்து தெரிவித்த அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , நான் தான் சிவாஜிலிங்கத்தை என் முன்னால் அழைத்தேன். என்னை சமாதானப்படுத்த என , அது தற்செயலான தப்பபிராயத்தை ஏற்படுத்தி விட்டது. அதனை நாம் மறப்போம் என தெரிவித்தார் .