கறுப்புப் பண பதுக்கலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வருமான வரி அலுவலர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர் எனவும் இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஏடிஎம்களிலும் விரைவில் மக்களுக்கு தேவையான பணம் கிடைக்கச் செய்யப்படும் எனத் தெரிவித்த அவர் புதிய 2000 ரூபாய் தாள்கள் மக்களுக்கு கிடைப்பதில் பிரச்சினை இருப்பது என்றால், அந்தப் பணம் வேறு வழியில் வேறு யாருக்கோ செல்வதாகத் தான் அர்த்தம். அதை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.