தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த 3 பேரை கொன்றதாக இந்தோனேசிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜகார்த்தாவில் வைத்து இவ்வாறு மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கொன்றனர். கொல்லப்பட்டவாகள் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டாவது தடவையாகவும் இவ்வாறான தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புத்தாண்டு அல்லது கிறிஸ்மஸ் காலத்திலும் இவ்வாறு தாக்குதல் நடத்தத் திட்டமிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் 3 தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிப்பு
Dec 21, 2016 @ 12:53
இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்தாவின் தெற்கேயுள்ள புறநகர் பகுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் மூவரை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் தங்கியிருந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்களுடன் இடம்பெற்ற மோதல்களின் போது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இதனையடுத்து மோதல் இடம்பெற்ற வீட்டின் அருகேயுள்ள வீடுகளில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அங்கு இருந்த வெடிகுண்டுகள் ,வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.