168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனிக்கான வரி 13 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி 6 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 7 ரூபாவாக காணப்பட்ட சீனி இறக்குமதி வரி தற்போது 13 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சீனிக்கான சில்லறை விலைகளில் மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஒரு கிலோ சீனி 95 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love