குளோபல் தமிழ்ச் செய்திகள்
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்குமாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுமார் 58 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை எழுத்து மூலமாக முன்வைக்க உள்ளனர்.
தேசிய அரசாங்கத்தின் விதிமுறைகள் நியதிகளை உதாசீனம் செய்து அவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் ஊடக மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமால் போபகே செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே நிமால் போபகேவை பணி நீக்க வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.