157
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவி விலகியுள்ளார். இவருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே நிலவி வந்த முரண்பாடுகள் காரணமாகவே இவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நஜீப் ஜங் தனது பதவிவிலகல் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதுடன் தனக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசு மற்றும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நஜீப் ஜங் பதவி விலகியதனையடுத்து, புதிய ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love