153
ஈராக்கின் மொசூல் நகர் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகளி;மிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரச படைகள் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோக்ஜலி என்ற இடத்தில் உள்ள சந்தைப் பகுதியில் மூன்று கார் வெடிகுண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் 8 காவல்துறையினர் மற்றும் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love