183
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பிரிவில் இருந்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட உடைகள் மற்றும் கையுறைகள் ஒருதொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சமையல் செய்பவர்கள் பயன்படுத்தும் உடை மற்றும் கையுறைகள் அடங்கிய 904 பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை இலங்கையூடாக ஸ்லோவேனியாவுக்கு அனுப்பப்படவிருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
Spread the love